வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்யும் மழையுடனான காலநிலை நாளை வியாழக்கிழமை முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வட மத்திய மாகாணத்திலும் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிரிடி ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
அத்துடன் வெள்ள நிலைமை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.