நுவரெலியா மாஎலியா, லோகாந்தயா பகுதியில் நேற்று சனிக்கிழமை காயமடைந்த சுற்றுலா பயணிக்கு சிறப்பு அதிரடிப் படையினர் முதலுதவி வழங்கியுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
லோகாந்தயா பகுதியில் பயணம் மேற்கொண்ட இரண்டு சுற்றுலா பயணிகளில் ஒருவரான சீன நாட்டின் பெண் ஒருவருக்கு மலையேறும் போது இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதி முகாமை சேர்ந்த சிறப்பு அதிரடிப் படையினர் காயமடைந்த சுற்றுலா பயணியை மீட்டு 4 கிலோ மீற்றர் தூரம் தூக்கிச்சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

