கடுகண்ணாவை பிரதேசத்தில் மலை ஏறச் சென்ற 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பெண் ஒருவர் கடந்த 10ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.
மலை ஏறச் செல்வதாகக் கூறி ஹோட்டலில் இருந்து வெளியேறிய வெளிநாட்டுப் பெண் மீண்டும் விடுதிக்கு திரும்பாத நிலையில்இ விடுதி உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து கண்டி சுற்றுலா பொலிஸார் தேடுதல் பணியை முன்னெடுத்ததை தொடர்ந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.