தெனியாயவில் இன்று ஞாயிற்று கிழமை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மலையக மக்கள் அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்தின் தெனியாய நகரில் புனித மாத்தேயு பாடசாலை விளையாட்டு மைதானம் வரை நடைபயணம் ஒன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நடைபயணத்தின் நிறைவில், இலங்கை வரும்போது பல்வேறு வகையில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், அதனை தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.