மலையக புகையிரத சேவைகள் இல்லாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள் அவதி

-மஸ்கெலியா நிருபர்-

தித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடை பட்டு உள்ளது. இதன் காரணமாக வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன்,உடரதல்ல நானுஓயா பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் தாங்கள் செல்லும் பாடசாலைகளுக்கு முறையாக செல்ல முடியாது உள்ளது என தெரிவிக்கின்றனர்.

அப் பகுதியில் முறையாக அரச பேருந்து சேவைகள் இல்லை.

குறித்த பகுதிக்கு அரச பேருந்து சேவைகள் நடத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிய தந்தும் இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.