இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தங்க விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.