இந்திய தமிழ் தனியார் தொலைகாட்சியில் பாடல் போட்டியில் பங்கேற்றுள்ள மலையக சிறுமி அசானிக்குஇ தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் நிரந்தர வீடு ஒன்றினை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானொலி மூலம் பாடல் கேட்டு பாடி தேர்ச்சி பெற்ற அசானி தமிழ்நாட்டில் பாடல் போட்டியில் வெற்றி பெற்றால் தான் வீடு பரிசு என்பதே போட்டி விதிமுறை. ஆனால் நிரந்தர வீடில்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய அசானிக்கு அவரின் திறமைக்கு முதல் பரிசாக நிரந்தர வீட்டை கட்டிக் கொடுக்க உள்ளதாக வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளார்.