மலையகத்துக்கான விஜயமொன்றை நேற்று திங்கட்கிழமை மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மலையக குடும்பங்களை சந்தித்தாக தனது டுவிட்டரில் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் மலைநாட்டு குடும்பங்களைச் சந்தித்ததாகவும் அவர்களில் பலர் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் பற்றியும் கேட்டறிந்ததாக கூறியுள்ளார்.
மேலும் குறித்த மகளுக்கான சிறந்த வீடுகள், அந்த சமூகத்தின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி நேரடியாகக் கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.