கம்பளை – ரத்மல்கடுவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
ரத்மல்கடுவ பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்தவரின் இரண்டாவது மகனான 34 வயதுடைய சந்தேகநபரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் தனது 8 வயது மகளுடன் இந்த வீட்டில் வசித்து வருவதுடன், நோய்வாய்ப்பட்ட அவரது தாயாரும் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
சந்தேகநபரிடம் நேற்றுமுன்தினம் வெள்ளிகிழமை மருந்து வாங்கி வருமாறு தாய் கூறியுள்ளார். ஆனால் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளதுடன் மருந்தும் கொண்டு வரவில்லை என தாய் குற்றம் சாட்டியுள்ளார், இதனால் மகன் ஆத்திரமடைந்து தாயை தாக்கியுள்ளார்.
மிகவும் கடினமான பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கு அருகில் வேறு வீடுகள் எதுவும் இல்லாததால் தாக்கப்பட்ட தாய் மறுநாள் காலை வரை வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
மறுநாள் காலை இந்தப் பெண்ணின் மற்றொரு மகன் தாயை கம்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சனிக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இந்த நியைில் தலைமறைவாகியிருந்த மகன் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்ட போது தாயை நாற்காலியால் தாக்கியதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். எனினும் தனது தந்தை தனது பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியதாக சந்தேகநபரின் 8 வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.