குவைத்தில், இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் செய்ப் மகன்கோ, இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் இதன் போது “குவைத் மற்றும் சிங்கப்பூரில், இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளை, தமது அலுவலகம் கண்டிப்பதுடன், எல்லா சூழ்நிலைகளிலும் மரண தண்டனையை எதிர்ப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
குவைத்தில், இலங்கையைச் சேர்ந்த போதைபொருள் வர்த்தகர் ஒருவர் உள்ளிட்ட 5 பேருக்கும், மற்றும் சிங்கப்பூரிலும் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.