-மன்னார் நிருபர்-
மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் ( ஆற்றுவாய் ) உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் உள்ள சடலம் ஒன்று முத்தரிப்புத்துறை மீனவர்களால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த உடலை கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிசாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்