மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அருகில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
தள்ளாடி பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த, முச்சக்கரவண்டியும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்பொது முச்சக்கரவண்டியை செலுத்திவந்த பெண் பலத்த காயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணும், பெண்ணும் சிறு காயங்களுக்குள்ளாகியதாக தெரிய வருகின்றது.