மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக, தலைமன்னாரின் நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூறும் வகையில், மன்னாரில் இருந்து மாத்தளை வரையான 252 கிலோமீற்றர் நடைபயணம் நேற்று வெள்ளி கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடைபயணயத்தில் 11 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்று சனி கிழமை காலை 6.15 அளவில், தலைமன்னாரில் ஆரம்பமான நடைபயணம் பேசாளை வரை சென்று பேசாளை முருகன் ஆலயப் பகுதியில் வைத்து, அங்குள்ள மக்களுடன், மலையகம் 200 தொடர்பான உரையாடலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.