மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட 15 மெகாவோட் காற்று மின்சக்தி நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் கஞ்சன விஜேசேகர திறந்து வைத்தார். இந்த நிலையில், குறித்த காற்றாலைஇ திறப்பை கண்டித்து நறுவிலிக்குளம் கிராம மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தின் ஊடாக தங்களது கடற்றொழில் நடவடிக்கை, பாரியளவு பாதிக்கப்பட்டுவதுடன் தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.