தமிழகத்தில் இருந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூறும் வகையில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபேரணி ஒகஸ்ட் 12ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் மன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இதனை நினைவு கூறும் வகையில் மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவுஇ சிவில் அமைப்பு என்பன இணைந்து இந்த நடைபயணத்தை முன்னெடுக்கவுள்ளன.