பொலன்னறுவை மன்னம்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு பின்னர், குறித்த வீதியை சீர்செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, குறித்த வீதியில் வீதி சமிஞ்சைகள், அபாயச் சின்னங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபை அறிவித்துள்ளது.