மன்னம்பிட்டி பாலத்தின் ஊடாக போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெய்து வந்த தொடர்மழை காரணமாக மன்னம்பிட்டி பாலத்தை ஊடறுத்து வெள்ளம் பாய்ந்ததனால் அப்பாதையினூடாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்து வருகிறது
அதன்படி முதற்கட்டமாக கல்லெல்ல – மன்னம்பிட்டிய பிரதான வீதி கனரக வாகனங்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

