தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து தடை தொடர்கின்றது
நாட்டின் பலபாகங்களிலும் தொடர்மழை பெய்து வருகின்ற நிலையில் கண்டி போன்ற மேல் பகுதியில் இருந்து வெளியேறும் வெள்ளநீரும், மன்னம்பிட்டி பகுதியில் பெருக்கெடுக்கும் வெள்ளமும் சேர்ந்து மகாவலி கங்கையில் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் மன்னம்பிட்டி ஊடாக போக்குவரத்து கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கதுருவெல இருந்து மன்னம்பிட்டிக்கு புகையிரத சேவை மாத்திரமே இடம்’பெறும் நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.