வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர்இ தனது மனைவியைத் தாக்கிஇ தனது பதின்மூன்று வயது மகளை வன்புணர்ந்ததாக குற்றிம் சாட்டப்பட்டு அநுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், சாலியபுர பகுதியை சேர்ந்த முப்பத்தெட்டு வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சந்தேகநபரான கான்ஸ்டபிளின் மனைவி கடந்த 25ஆம் திகதி மாலை அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் செவ்வாய் கிழமை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.