மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாமாங்கம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது – 44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த நபர் தற்கொலை செய்துள்ளதோடு சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.