புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான தகராறில் எல்லை மீறிய கணவர் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.