நெடுந்தீவில் நேற்று வியாழக்கிழமை தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவு பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவருகையில்,
குறித்த நபர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்த வேளை மனைவி அதனைக் கண்ணுற்று எள்ளி நகையாடியுள்ளார். இதனால் அந்தக் குடும்பஸ்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்து உண்மையிலேயே தூக்கில் அகப்பட்டுள்ளார்.
இதன்போது அவரைக் காக்கும் நோக்கில் மனைவி காலைப் பிடித்தவாறு அவலக் குரல் எழுப்பியபோதும் அருகில் எவருமே இல்லாத நிலையில் குடும்பஸ்தர் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.