-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான மனித வியாபாரம் தொடர்பான தெளிவூட்டலுடன் கூடிய பயிற்சிநெறியானது கடந்த செவ்வாய் கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குச்சவெளி மற்றும் பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இதனை தேசிய கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் மேற்பார்வையின் கீழ் ஐ.ஓ.எம் மற்றும் அமகோர் நிறுவனம் ஒழுங்கு செய்தது.
இந்த பயிற்சிநெறியில் வளவாளராக வே.காண்டீபன், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
