நெலுவ, பன்னிமுல்ல பகுதியில் உள்ள கறுவா தோட்டத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 70 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று பிற்பகல் கறுவா தோட்டம் ஒன்றிலிருந்து சடலமாக மீ|ட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.