தெல்தெனிய வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.
பன்வில – கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருகச (வயது – 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த சிறுவன், வைத்தியசாலையின் 6ஆவது மாடியில் உள்ள அறையொன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.