ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து பரிஷத்தின் அமைப்பு சார்பில் இடம்பெற்ற மத ஊர்வலத்தைத் திட்டமிட்டு குழப்பும் நோக்கோடு சிலர் கல் வீசி ஊர்வலத்தில் குழப்பநிலையை உருவாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வலுத்தது. இத்தாக்குதலில் வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டதுடன் , துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக நூ மாவட்டத்தில் பதற்ற நிலை உருவானதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வன்முறையினால் காயமடைந்த மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.