திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதுண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த தாவூது சலீம் என்ற இருபிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிபோதையில் மூவர் மது அருந்திவிட்டு வீடு திரும்பும் போது உயிரிழந்தவர் தண்டவாளத்தில் உறங்கியதாகவும் திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு செல்லும் ரயிலே இவர் மீது மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் இன்று புதன் கிழமை ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
