மது போதையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் நபர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டு பதற்றத்தை தோற்றுவிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.