அனுராதபுரம் சீப்புக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்று கிழமை அதிகாலை மதுபான விருந்தின் போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சீப்புக்குளம் பகுதயை சேர்ந்த 8 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சகோதரர் உள்ளிட்ட சிலர் மதுபான விருந்தினை நேற்று பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த நிலையில், குறித்த விருந்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அதில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இருவரால் குறித்த நபர் தாக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்