மொரகஹஹேன தலகல பகுதியில் நண்பர்கள் குழுவொன்று ஏற்பாடு செய்திருந்த மதுபான விருந்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
மினுவாங்கொடை மபொடல இத்தவத்த பிரதேசத்தில் வசிக்கும் அகழ்வு இயந்திர சாரதியாக பணிபுரிந்த ஒரு பிள்ளையின் தந்தையான பி. நிரோஷன் சந்திமாவே (வயது – 39) கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாள்வெட்டு தொடர்பில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.