பெறுமதி சேர் வரி அதிகரிப்புடன் மதுபானத்தின் விலையும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் எரந்த கொடித்துவக்கு இதனை தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வரித் திருத்தத்திற்கு அமைய பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீது 18 வீத பெறுமதி சேர் வரி விதிக்கப்படவுள்ளதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.