பதுளை ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்று கிழமை காலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் தந்தை, தாய் மற்றும் மூன்று மகள்கள் மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோரே இவ்வாறு படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் லுனுகலவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பண்டாரவளைக்கு இன்றுகாலை திரும்பிக்கொண்டிருக்கும் போது மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் இவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.