கெபிதிகொல்லாவ கலவெவ பிரதேசத்தில் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்டுவலகாலேவெவ, கெபிதிகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள நெல் ஆலை ஒன்றில் தங்கியிருந்ததாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மேலும் இருவர் மண்வெட்டியால் உயிரிழந்தவரின் தலையில் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபரை அப்பகுதி மக்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு சொந்தமான 02 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கெபிதிகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.