-பதுளை நிருபர்-
தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீற்றர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த வெள்ளசாமி கருப்பையா (வயது 71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்று வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.