பதுளை – ஹாலிஎல ,ரொக்கதென்ன தோட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை காலை அமைந்துள்ள வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.