பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் நேற்று புதன் கிழமை காலை 10 மணியளவில் பண்டாரவளை – பதுளை பிரதான வீதிக்கு மேலே உள்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இரு சொகுசு வாகனங்கள், வேன் மற்றும் ஆட்டோவொன்றே இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளன, இரு வாகனங்கள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
இவ்வனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது