-பதுளை நிருபர்-
பதுளை மட்டக்களப்பு வீதியில் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரவாகும்புற பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் மண்மேட்டை அகற்றும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு குறித்த மண்சரிவு காரணமாக அருகாமையில் உள்ள எத்துன்கமுவாவ பகுதியில் 3 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்