-பதுளை நிருபர்-
பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக லுணுகலை ஹொப்டன் கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் கட்டிடத்தின் பாரிய மண்மேட்டுடன் கற்கள் விழுந்ததில் கட்டிடம் முற்றாக இடிந்து நாசமாகியுள்ளதாக பாடசாலையின் அதிபர் வடிவேல் நிரோஷன் தெரிவித்தார்.
இக்கட்டடத்தில் 1ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களின் வகுப்புகள் நடைபெற்று வந்ததாகவும், மண் சரிவு காரணமாக மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு கட்டிடம் நாசமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


