பேருவளை துறைமுகப்பகுதியில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மானிய முறையில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விநியோகத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 28000 மீனவர்களுக்கு மானிய முறையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.