பதுளை மாவட்டத்தில் உள்ள ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு மண்சரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் படி காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை நேற்று சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.