-பதுளை நிருபர்-
நமுனுகுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனவரல்ல தோட்டம் மவுஸ்ஸாகலை பிரிவில் இலக்கம் 3 தொடக்கம் 15 வரையிலான லயன் குடியிருப்பில் மண்சரிவு காரணமாக 18 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் கனவரல்ல இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் மடுல்சீமை விராளிபத்தன டிவிஷன் டூமோ பிரிவில் 49 குடும்பங்களை சேர்ந்த 154 பேர் கல்லுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.