பதுளை பண்டாரவளை வீதியில் உடுவரை 7 ஆம் கட்டை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நேற்று வியாழக்கிழமை மனித எலும்புத் துண்டுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
வீதியில் இருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் போது மனித எலும்புகள் காணப்பட்டதை அடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட ஹாலிஎல பொலிஸார் மண்சரிவு எற்பட்ட பகுதி மயானம் எனவும் மண்சரிவால் புதைக்கப்பட்ட ஒருவரின் சடலத்தின் எலும்பு துண்டுகள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தன் பின்னர் மனித எச்சங்களை புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.