ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 12 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும்.
இதேவேளை, அனுராதபுரம் – அங்கமுவ நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நில மக்களை அவதானமாக இருக்குமாறு ராஜாங்கனை நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.