நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தின் ஹல்தமுல்லை பிரதேச செயலகப் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, எலபாத்த, கலவானை, இரத்தினபுரி மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.