பண்டாரவளை, தந்திரிய பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம் பெற்ற பாரிய மண்சரிவினால் கட்டுமான நிறுவனம் ஒன்றின் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் அதற்குள் இயந்திரம் மற்றும் லொறி ஒன்றும் சிக்கி சேதமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த கட்டிடத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை வாகனமொன்றும் சிக்கி சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை.