காலி – இமதுவ பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை – வலவ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த பின்னதுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவில் கடமையாற்றும் நிஷாந்த பெர்னாண்டோ (வயது – 42) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இமதுவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சேதங்கள் இடம்பெற்றதாவென பார்வையிட பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சென்ற போது மீண்டும் அந்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.