இரத்தினபுரி எண்தனவில் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மண் சரிவு தொடர்பில் மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.