குருநாகல் பொல்கஹவெல பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் நேற்று திங்கட்கிழமை இரவு மணல் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியில் மோதுண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 45 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த கான்ஸ்டபிள் நேற்றிரவு நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த போது, வீதியில் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்து கொண்டிருந்த போது, கந்தளேயிலிருந்து கடுவலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வீதியின் ஓரத்தில் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.