மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று ஞாயிற்று கிழமை 7 ஆம் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக அடியார்கள் சூழ விநாயகப்பெருமான் நடுவே அமர்ந்து காட்சியளிக்க வலது பக்கம் பார்வதி சிவனும் இடது பக்கம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மேலும் நல்லையா உடையார் குடும்பத்தினரின் 7 ஆம் திருவிழாவை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவன மாணவர்களின் மாபெரும் நடனநிகழ்வு இடம்பெற்றதுடன், மகிழடித்தீவு கண்ணகி கலை மன்றத்தின் ஆரவல்லி வடமோடிக் கூத்து, மற்றும் உடுக்கை இசையும் நிகழ்த்தப்பட்டது.



