மட்டக்களப்பு தனியார் பேருந்து உரிமையாளர்களால் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வாரம் மன்னம்பிட்டி கொட்டலி பாலம் அருகே பேருந்து (சச்சின்) ஒன்று விபத்துக்குள்ளாகி 11 பேரின் உயிரை காவு கொண்டது.
குறித்த பேருந்து விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் கோரிக்கை முன்வைத்ததை தொடர்ந்து இன்று மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்தின் அருகே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்இ இந்த விபத்தின் பின்னரும் குறித்த பேருந்து உரிமையாளருக்கு சொந்தமான மொரு பேருந்து இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பிற்கு பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக நேர கட்டுப்பாடுகளை மீறி வந்துள்ளது.
இதேவேளை ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை தொடர்ந்து பயணிகளை ஏற்றி செல்வதற்கா வந்த பேருந்தின் சாரதியிடமும் நடத்துனரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துரையாடினார்.
இதன்போது கருத்துரைத்த இரா.சாணக்கியன்,
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கைகூலியாக செயற்பட்ட வீதி போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரியாக இருந்த யுவநாதன் பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாது பயணிக்க அனுமதித்ததாக குற்றம் சுமத்தினார்
இதனைத்தொடர்ந்து இரு குழுக்களுக்கிடையே அவ்விடத்தில் வாய்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


